தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பு எம்.பிக்களை சேர்க்க உத்தரவு

வடக்கு -கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், உள்­வாங்­கப்­ப­டாமை தொடர்­பில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது அதி­கா­ரி­களை கடிந்­து­ கொண்­டுள்­ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உட்­பட, வடக்கு - கிழக்­கைப் பிர­தி ­நித்­து­வப்­ப­டுத்­தும் அர­சி­யல் தரப்­புக்­களை செயலணியில் உள்­வாங்­கு­மாறு அவர் ஆலோ­சனை உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான சிறப்­புச் செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. கூட்­டத்­தின் முடி­வில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­டுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு அனுப்­பப்­ப­டாமை தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

செய­லணி உறுப்­பி­னர்­க­ளாக அவர்­க­ளது பெயர்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று ஜனாதிபதியின் அதிகாரிகள் ­கு­ழா­மைச் சேர்ந்­த­வர்­கள் கூறி­யுள்­ளார்­கள். கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளை­யும் உள்­ள­டக்­கு­மா­று­தானே பணித்­தேன் என்று, அவ­ரது அதிகாரிகள் ­கு­ழா­­மைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளு­டன் ஜனாதிபதி கடும் தொனி­யில் கூறி­யுள்­ளார்.

வடக்கு - கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் அந்த மாகா­ணங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களை உள்­ள­டக்­க­வேண்­டும். சகல அர­சி­யல்­த­ரப்­புக்­க­ளை­யும் உள்­ள­டக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று அவர் பணித்­துள்­ளார்.