தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

மடு மாதா திருத்தலம் புனித பிரதேசமாகப் பிரகடனம்


மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும், அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும், அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கத்தோலிக்க பக்தர்களின் பக்தி மிகுந்த புனித திருத்தலமான மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து மக்களின் திருயாத்திரைக்கும் பாத்திரமாகியுள்ளது. வருடாந்த திருவிழாவுக்கு மட்டுமன்றி வருடத்தின் எல்லா சந்தர்ப்பங்களிலும் யாத்திரிகர்களும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும் மடு தேவஸ்தானத்தை தரிசிக்க வருவதுண்டு.

கடந்த கால யுத்தங்களின் போது இந்த தேவாலயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீண்டகாலமாக பராமரிப்பு அல்லது மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனால் மடு திருத்தல பிரதேசம் கஷ்டப் பிரதேசமாகவும் குறைந்த வசதிகள் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகிறது. மேற்படி காரணங்களைக் கருத்திற்கொண்டு மடு திருத்தலம் உள்ளிட்ட பிரதேசங்களை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி போக்குவரத்து, நெடுஞ்சாலை, நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசத்தில் ஓய்வு விடுதி உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்தவும் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு ள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.