வியாழன், ஆகஸ்ட் 30, 2018

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! - ராஜித சேனாரத்

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக கூறும் வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் முதலில் மத்திய அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக மக்கள் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் -

'இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆராய வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

அவர் சாட்சி இருப்பது பற்றி பேசுவதை விடுத்து குடியேற்றங்கள் உருவாக்கப்படுகிறதா? இல்லையா? என்று தான் அறிவிக்க வேண்டும். சாட்சி பற்றி பேச வேறு நபர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு ஏதும் குடியேற்றங்கள் அமைக்கப்படுகிறதா? என அவர் அரசாங்கத்திடம் வினவியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு கிடையாது. கோட்டாபயவின் காலத்தின் பின்னர் அவ்வாறான முன்னெடுப்புகள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.