03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

ஸ்ரீ லங்காவை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல கையெழுத்து வேட்டையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

 

 ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல்
நீதிமன்றுக்கு, பிரித்தானியா ஆற்றுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் . அதற்கான முயற்சிகளில் பன்னாட்டு தளத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கடந்த 12 ம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹம் முருகன் கோயில் ,ஈலிங் அம்மன் கோயில் ஆலய தேர்த்திருவிழாவின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மக்களிடம் கையெழுத்து சேர்க்கும் பிரச்சார பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்துக்குப் பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.
2017 மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று (34/1) நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.
இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்குநாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது யாவருக்கும் தெரியும் . சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. இன்று வரைக்கும் எவை நிறைவேற்றப்பட்டன என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமானஅலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கையகாலதனமான ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது .பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக்கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே யதார்த்தம்.
பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒருபோதும் எமது உரிமைகளைத் தர முன்வராது என்பதே உண்மையும்கூட . நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணும் என்பது, நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் ‘ஆறினகஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வாறானதொரு செயற்பாட்டில் தீவிரமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.