புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2018

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும்
குற்றவாளிகளை விடுவிக்க முடியாதென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முடியாதென்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிராக, பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்றில்  (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.
அத்துடன் ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை, ஜனாதிபதியும் நிராகரித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என, தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்

ad

ad