தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

கனடா- ஸ்காபுரோவில் தமிழ் இளைஞன் உள்ளிட்ட இருவர் துப்பாக்கி, போதைப் பொருளுடன் கைது

கனடா- ஸ்காபுரோ பகுதியில் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன், தமிழ் இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா- ஸ்காபுரோ பகுதியில் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன், தமிழ் இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

McCowan Avenue பகுதியில் 401 நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய போது பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனத்தில் இருந்து கொகோயின், மரிஜுவானா, சிசிலோபின் காளான்கள் மற்றும் மூன்று பத்திரிகைகளும் வெடிமருந்துகளும் கொண்ட SKS 7.62mm துப்பாக்கியும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுஜன் பாலசுப்ரமணியம் என்ற 19 வயது தமிழ் இளைஞன் மற்றும் Jaspal Bhatti என்ற 22 வயது இளைஞனும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.