03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - பிரிட்டன்


இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் பல உள்ளன. இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளிற்கு பிரிட்டன் உதவுவதுடன் இலங்கை அரசாங்கம் தனது மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் தமது பகுதிகளிற்கு திரும்பும் மக்களிற்கு உதவும் நோக்கில் யுஎன்டிபியுடன் இணைந்து பிரிட்டன் 1.3மில்லியன் டொலர் பெறுமதியான திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தமது கிராமங்களிற்கு மக்கள் திரும்புவதற்கு உதவுவது குறித்து பிரிட்டன் மகிழ்ச்சியடைந்துள்ளது. மோதலின் பாராம்பரியங்களிற்கு தீர்வு கண்டு தற்போது இடம்பெற்றுவரும் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு இது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.