புதன், ஆகஸ்ட் 29, 2018

கோட்டாபய வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆஜராகியுள்ளார்.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்கு ஆஜராகுமாறு குறித்த திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலை அடுத்தே அவர் இவ்வாறு விசாரணைகளுக்கு ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 9.15 மணியளவில் அவர் ஜனாதிபதி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகிய இருவரும், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

அந்த ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இருவரும் ஆஜராகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.