தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 06, 2018

கரும்புலிகள் அணியின் முன்னாள் முக்கிய பெண் போராளி இந்தோனேசியாவில் மரணம்?


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில் சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில் சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தியா என்ற பெண் போராளியே இந்தோனேசியாவின் ஜகார்த்தா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் பாரமி குலதுங்க ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சந்தியா என்கின்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற போது, படகு விபத்துக்குள்ளானதில், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் முகாமில் அவர் தங்கியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது