புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2018

மூன்றில் இரண்டு கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்! - சுதந்திரக் கட்சி விடாப்பிடி

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே
சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு. எல்லை நிர்ணய அறிக்கையை வாசித்த பின்னரே அதனை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
எல்லை நிர்ணய அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை விவாதத்துக்கு எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. அவ்வாறு எடுக்க முடியாமல் போனால் அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்ற மாற்றுவழியை நாம் கையாள்வோம்.
சபாநாயகரால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு மாத காலத்துக்குள் ஜனாதிபதிக்கு முன்வைக்கும் அறிக்கையில், எல்லை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டால் இதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படாது.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டது போல் மாகாணசபைத் தேர்தலும் புதிய முறையில் நடத்தப்பட வேண்டுமென்பதே எமது விருப்பம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசியலமைப்புச் சபையை கோரவுள்ளதாகவும் கூறினார்.



ad

ad