03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

விக்னேஸ்வரனின் கோரிக்கை கூட்டமைப்பினால் நிராகரிப்பு!வட-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிராகரித்துள்ளது.

வட-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிராகரித்துள்ளது.

வட-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.

இந்தநிலையில், அரசியல் தீர்வு எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், கோரி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதம் தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று கூடி ஆராய்ந்தது. இதன்போது வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளன. அதைவிட, நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஜனாதிபதி செயலணி அமைந்துள்ளது. எனவே செயலணி கூட்டத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து செயலணி கூட்டத்தில் கலந்து கொள்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது