தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர்! - மட்டக்களப்பு பாடசாலையில் பதற்றம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர், துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என்ற தகவல் வெளியானதை அடுத்து, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் இன்று குறித்த பாடசாலையில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர், துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என்ற தகவல் வெளியானதை அடுத்து, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் இன்று குறித்த பாடசாலையில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

களுவாஞ்சிக்குடி மற்றும் செட்டிப்பாளையம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவியொருவரை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பாடசாலையை முற்றுகையிட்டதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு உதவியாக, கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கைது செய்யும்வரை பாடசாலையை விட்டு வெளியேறப் போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் மாணவியொருவரை அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார், எனினும் பயத்தின் காரணமாக குறித்த மாணவி யாரிடமும் வீட்டாரிடமோ, பாடசாலைத் தரப்பிடமோ தெரியப்படுத்தாது தனது நண்பியிடம் மாத்திரம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் அம் மாணவி அறிவித்துள்ளதையடுத்தே பாடசாலை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.எனினும், இந்த சம்பவம் இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை என தெரிவித்து பாடசாலையை முற்றுகையிட்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட