தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

வவுனியாவில் மாணவிகளைக் கடத்தி வாயில் அலரி விதையை திணித்த மர்ம நபர்கள்

வவுனியாவில், தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயது மாணவிகள் இருவர் நேற்று கடத்தப்பட்டதாக, சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். “நேற்றுக் காலை எனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றதுடன் மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் தமது நண்பியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பெரியார்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இருவர் அவர்களைத் தடுத்துநிறுத்தி வலுகட்டாயமாக முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று சாந்தசோலை பகுதியில் யாருமற்ற வீட்டொன்றிற்கு கொண்டு சென்றதுடன் அங்கு இருவரையும் கயிற்றினால் கட்டியதுடன் தாக்கியுமுள்ளனர்.

அத்துடன் அலரி விதைகளை அரைத்து வாயில் திணித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்து எமக்கு நடந்த சம்பவத்தைத் தெரியப்படுத்தினர். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் நாம் அவர்களை அனுமதித்தோம்.” என்றார்.

குறித்த மாணவிகள் இருவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.