03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018

கொடைக்கானலில் காருக்குள் நடிகையுடன் உல்லாசம் : வாலிபர் கொலையில் போலீசார் தீவிர விசாரணை


ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சூரிய நாராயணன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவர், சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணனை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் விஷ்ணுபிரியா துணை நடிகை ஆவார். நடிகர் சூர்யா நடித்த மாயாவி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.கணவர் ரமேஷ் கிருஷ்ணா போதை பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதால் சூரிய நாராயணனுக்கு சொந்தமான கொடைக்கானல் பங்களாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கொடைக்கானலில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான பங்களா மற்றும் தோட்டம் உள்ளது. இதனை பராமரிப்பதற்காக வேலையாட்களையும் சூரிய நாராயணன் நியமித்துள்ளார்.

விஷ்ணுபிரியா தனது குழந்தைகளுக்காக சென்னையில் தங்கி இருந்துள்ளார். கொடைக்கானலில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக அவ்வப்போது கொடைக்கானல் வருவார். சென்னையில் இருந்து விஷ்ணுபிரியா உறவினர்கள் எப்போதாவது மட்டுமே கொடைக்கானல் வந்து செல்வார்கள்.

ஒருமுறை சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை சென்ற விஷ்ணுபிரியா, அங்கிருந்து வாடகை கார் மூலம் கொடைக்கானல் சென்றுள்ளார். அப்போதுதான் கொடைக்கானலைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கார் டிரைவர் அறிமுகம் ஆனார். விஷ்ணுபிரியா சினிமாவில் நடித்திருந்தால், பிரபாகரன் ஜாலியாக பேசி கவர்ந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. உடனே விஷ்ணு பிரியாவின் செல்போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டார்.அதன் பிறகு எப்போது கொடைக்கானல் வந்தாலும் பிரபாகரனையே மதுரை விமான நிலையத்துக்கு வரவழைத்துள்ளார். சொகுசு பங்களா இருந்தபோதும் அதில் தங்காமல் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கினர்.

தனது கணவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதால், தன்னையும் தன் குழந்தைகளையும் அரவணைத்துச் செல்லவும், பாதுகாப்பாகவும் இருக்கவும் ஒருவர் தேவை. அவரை தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரை மனம் முடிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் அதற்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று தந்தையிடம் விஷ்ணுபிரியா கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூரிய நாராயணன், தனது அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சற்று பொறுமையாக இரு, உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து யார் அந்த பிரபாகரன் என்று விசாரித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பழக்கமானது எப்படி, இவர்கள் அடிக்கடி சொகுசு பங்களா இருந்தபோதும் அதில் தங்காமல் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியது, மேலும் காருக்குள்ளேயே அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளது வரை தெரிந்துள்ளது. கொடைக்கானல் ஓட்டலில் தங்கி இருந்த போது பல லட்சம் ரூபாயை விஷ்ணுபிரியாவிடம் இருந்து பிரபாகரன் பெற்றார். ஒரு முறை பிரபாகரனின் கார் பழுது ஏற்படவே புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.தனது கள்ளக்காதலன் பிரபாகரனை சந்திக்கவே விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்ததுடன் பல நாட்கள் இங்கேயே தங்கி இருந்தார். மேலும் சென்னையில் இருந்து வரும் போது பிரபாகரனுக்கு ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

கணவர் ரமேஷ் கிருஷ்ணனை சந்திக்கத்தான், கவனிக்கத்தான் அடிக்கடி கொடைக்கானல் விஷ்ணுபிரியா செல்வதாக நினைத்த சூரிய நாராயணன், இதனை கேட்டதும் மிகவும் மனவேதனை அடைந்தார். மகள் மற்றும் அவரது குழந்தைகள் மீதும் பாசம் கொண்ட சூரிய நாராயணன், மகள் மறுமனம் செய்வதை விரும்பவில்லை.

செந்தில்குமார் என்பவர் மூலம் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதுடன், செந்தில்குமார் வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் பணம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார், மூன்று பேர் உதவியுடன் பிரபாகரனை நைசாக பேசி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் 4 பேரும் கைதாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள விஷ்ணுபிரியாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சூர்ய நாராயணன் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.