03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஆகஸ்ட் 25, 2018

ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பர்! - செல்வம் அடைக்கலநாதன

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சி பேதமின்றி ஜனாதிபதி செயலணியில் பங்கேற்குமாறு மயிலிட்டி துறைமுகத்தின் மீள்நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின்போது ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். எனினும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.