புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2018

தி.மு.க-வில் யார், யாருக்கெல்லாம் பதவிகள்? - கோபாலபுரத்தில் நள்ளிரவு ஆலோசனை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் குடும்ப விவகாரம், கட்சி தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7-ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என தி.மு.க.வின் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதற்கு அழகிரி தரப்பு இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதி, நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கியபோது செயல் தலைவரானார் ஸ்டாலின். தி.மு.க-வின் முழுகட்டுப்பாடும் ஸ்டாலின் கையில் இருந்தாலும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்கள் இன்னமும் தி.மு.க-வில் உள்ளனர். இதைத்தவிர குடும்ப அரசியலால் அவ்வப்போது முட்டல் மோதல்கள் கட்சியில் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் சமாளித்துதான் கருணாநிதிக்குப்பிறகு தி.மு.கவை வழிநடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின்.

அழகிரி, கனிமொழியின் அடுத்தகட்ட மூவ்மெண்ட்கள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதை மற்ற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்துவருகின்றன. குடும்பத்திலிருந்தே குழப்பம் ஏற்படாமலிருக்க ஒவ்வொரு காய் நகர்த்தல்களிலும் ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாகவே செயல்பட்டுவருகிறார். கருணாநிதியின் சமாதி விவகாரத்திலிருந்து இறுதி அஞ்சலி, ஊர்வலம், கட்சியின் செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும் குடும்ப உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல் கட்சியினேராடு கலந்து ஆலோசித்துதான் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். குறிப்பாக கனிமொழி, ஸ்டாலினுடன் அடிக்கடி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த நிலையில் அடுத்து கட்சியை எப்படி வழிநடத்தலாம் என்று குடும்ப உறுப்பினர்களோடும் கட்சியின் மூத்த தலைவர்களோடும் ஸ்டாலின் தரப்பு ஆலோசித்துள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்கோபாலபுரத்தில் குடும்ப உறுப்பினர்களோடு ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது குடும்பத்திலேயே மீண்டும் முட்டல் மோதல் இருந்தால் அது நமக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படும்போது, தயாளு அம்மாள் மூலம் தீர்வு எட்டப்படும். தற்போது உடல்நலக்குறைவால் அவராலும் அந்தளவுக்கு செயல்பட முடியவில்லை. தயாளு அம்மாளின் பொறுப்பை செல்வி செய்துவருகிறார். அவர்தான் குடும்பத்தினருக்கு இணைப்புப் பாலமாக இருந்துவருகிறார்.

குடும்பத்தில் உள்ள சொத்துகள் குறித்து ஏற்கெனவே சில முடிவுகள் எட்டப்பட்டுவிட்டன. இதனால் சொத்துகள் தொடர்பாக பெரியளவில் பிரச்னைகள் இல்லை. இருப்பினும் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் எழுந்தபோது அதற்கும் ஸ்டாலினே ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது, கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி ஆகிய மூவருக்கும் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்கலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுபோல அழகிரிக்கு கட்சியில் மீண்டும் முக்கியப் பதவி கொடுக்கவும் க்ரீன் சிக்னல் காட்டப்பட்டுள்ளது. மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியே வழங்கப்படலாம். இதற்கு அழகிரி தரப்பு யோசித்து முடிவு சொல்வதாகக் கூறியிருக்கிறார்களாம்.

கனிமொழி தற்போது, மகளிரணி செயலாளராக உள்ளார். அவருக்கு ஸ்டாலின் வகித்து வரும் பொருளாளர் பதவியைக் கொடுக்கலாமா என்று ஆலோசனை நடந்தது. அதற்கு கட்சியின் 90 சதவிகித மூத்த நிர்வாகிகள் சம்மதித்துள்ளனர். அப்போது குடும்பத்தினருக்கே கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற விமர்சனம் எழும் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால், கே.என் நேரு அல்லது ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவியை வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவுக்குப்பிறகு செல்வி, தமிழரசு ஆகியோர் கட்சியில் நேரிடையாக களமிறங்க உள்ளனர். அதாவது அவர்கள் இருவரில் ஒருவருக்கு திருவாரூர் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஸ்டாலின் எடுத்த முடிவுகளுக்கு அழகிரி, கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கட்சியினரும் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து அதை மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருக்கிறார். விரைவில் நடை

ad

ad