வியாழன், ஆகஸ்ட் 30, 2018

மன்னார் நீதிவான் பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்

மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை இவர் குறுகிற காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு விசாரணைகளை கடுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதிவானுக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் போன்றவற்றின் காரணமாகவே மன்னார் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது