புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2018

காணாமல் போனோர் அலுவலக நடவடிக்கைகளுக்கு சுவிஸ் ஆதரவு!


இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆய்வினை நடத்துவதற்காக சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், நீதி அமைச்சருமான சிமோநெட்டா சொமாருகா இலங்கைக்கு 4 நாள் விஜயம் செய்திருந்தார்.

இதன் பின்னர் , இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் முறையாக இடம்பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

இலங்கையில் அவர் தங்கி இருந்தக் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களையும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதானி, மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

அவரது விஜயம் தொடர்பில் சுவிட்சர்லாந்தின் ஊடகம் ஒன்று வெளியிட்ட செவ்வியிலே சிமோநெட்டா சொமாருகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என்று சிமோநெட்டா சொமாருகா உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad