03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஆகஸ்ட் 25, 2018

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்


தமிழகத்தில் மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை தான் என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.இதையடுத்து நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பொலிசார் கடந்த மாதம் விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் 1160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிர்மலாதேவியின் பேச்சுக்களை சிடிகளாக மாற்றியுள்ளதாகவும், 160 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நிர்மலா தேவி, இந்த வழக்கில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியை வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, சிம் கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மேலும் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரை செய்து நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.