தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுழைந்த இளைஞா் குழு அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தின் போது கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவிலிருந்து வந்திருந்தவா்களின் வீட்டிற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் மோட்டா் சைக்கிளில் சென்ற 6 போ் கொண்ட குழுவினரே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டனா்.

குறித்த வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் வாயிற்கதவின் மின்விளக்குகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.