தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 06, 2018

பெல்ஜியம் செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, பெல்ஜியத்துக்கு செல்ல முயன்ற, இலங்கை பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்நபர், மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கையிலிருந்து, சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை நாடு திரும்பிய அவர், பெல்ஜியம் நோக்கி பயணிப்பதற்கான, கடவுச்சீட்டை கையளித்துள்ளார். அதனை சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்த கடவுச்சீட்டு மலேசியா கடவுச்சீட்டென்றும், அது போலியானது எனவும், குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனையடுத்தே, அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், “தான் பயணித்த விமானத்தில் வைத்தே, மேற்படி கடவுச்சீட்டை தன்னிடம் வழங்கப்பட்டது என்றும், அதனைப் பயன்படுத்தியே, பெல்ஜியத்துக்கு பயணக்கவிருந்ததாக தெரிவித்துள்ளார்” என்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.