புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

திமுகவில் இனி செயல் தலைவர் பதவி கிடையாது - கட்சி விதி நீக்கம்


திமுகவில் இனி செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
திமுகவில் இனி செயல் தலைவர் பதவி கிடையாது - கட்சி விதி நீக்கம்
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாததால், கட்சியில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். கட்சியை அவர் வழிநடத்தி வந்தார். கருணாநிதி மறைந்ததும், தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கான தேர்தலில், மு.க.ஸ்டாலின் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



அதேசமயம், ஸ்டாலின் வகித்து வந்த திமுக செயல் தலைவர் பதவி இனி கிடையாது. செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி 4-வது பிரிவு நீக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அன்பழகன் அறிவித்தார்.

மேலும், மாவட்ட எல்லைகளில் மாற்றம் செய்ய கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் இருக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ad

ad