03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஆகஸ்ட் 15, 2018

கிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை

ஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு நாமல் ராஜபக்ஸ,
ரோஹித்த ராஜபக்ஸ மற்றும் அவரது காதலி டட்யனா லீ ஆகியோர் சென்றுள்ளனர்.இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த வருடத்தின் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என தமது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.மேலும்,“ஒன்பது வருட தொடர் முயற்சியின் பின்னர் தங்காலையில் இருந்து கிளிமாஞ்சாரோவுக்கு வந்துள்ளதால் ரோஹித்த ராஜபக்ஸவுக்கும், டட்யனா லீக்கும் எனது நன்றிகள்.
நீங்கள் எனக்கு மிகவும் விருப்பமான ஜோடிகள். உங்கள் இருவரின் வெற்றிக்கு அன்பும், ஆசீர்வாதமும் என்றும் இருக்கும்.நிச்சயமாக இந்த தருணமே இந்த வருடத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்” எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், ரோஹித்த மற்றும் அவரது காதலியுடன் நாமல் எடுத்த புகைப்படத்தையும், ரோஹித்தவின் காதலியுடன் ரோஹித்த இருக்கும் புகைப்படத்தையும் நாமல் பதிவிட்டுள்ளார்.