03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

Breaking News °°°°°°°°°°°°°°°°°°°° இத்தாலியில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி


இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும் 200 மீட்டர் நீள பாலம் உள்ளது. இதன் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து, 100 அடி கீழே இருந்த புறநகர் ரெயில் பாதை மீது விழுந்தது. இந்த அதிர்வு காரணமாக அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

அப்போது ரெயில்பாதையையொட்டி சென்ற கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இதன் இடிபாடுகளில் சிக்கின. இதனால் வாகனங்களில் சென்றவர்கள், கட்டிடங்களில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் நடமாடியவர்கள் என 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 25–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன