புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2018

https://seithy.com/listAllNews.php?newsID=208542&category=TamilNews&language=tamil


பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் தென்னிந்திய நகரங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் தென்னிந்திய நகரங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, போக்குவரத்து, கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலாத்துறை முதலான மூன்று அமைச்சுகள் இணைந்து சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.விமான நிலையத்தை புதுப்பிப்பதற்கான திட்டம் விமானப் படையிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 1000 ஏக்கர் நிலத்தில் பலாலி விமான நிலையம் அமைந்துள்ளது. எனினும், 750 ஏக்கர் நிலமே அதன் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளது.>எஞ்சியுள்ள 250 ஏக்கர் காணி விடுவிக்கப்படலாம் என்று யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான நிலைமைகளை மூன்று இந்திய அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு செய்துள்ளன

ad

ad