புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழப் போவது உறுதி : திருநாவுக்கரசர்


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சி கவிழப் போவது உறுதி’’ என திருநாவுக்கரசர் பேசியுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலம் தந்தை பெரியார் சமூக நலக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பிக்கள் விஸ்வநாதன், ஜெ.எம்.ஆரூண், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் தணிகாசலம், வழக்கறிஞர் சாந்தி, தாமோதரன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:

இந்தியா முழுவதும், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்நது வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மத்தியில் காவி ஆட்சியும், மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது.

இந்த மக்கள் விரோத ஆட்சிகளை அகற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. எப்படி தீர்ப்பு வந்தாலும் அதிமுக ஆட்சி கவிழ போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்

ad

ad