புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2018

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 21ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு வரைவுக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில், அரசியலமைப்பு வரைவின் சிங்கள மொழிப் பிரதி சமர்ப்பிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவுக்கு அதன் தமிழ் மொழிப் பிரதியும் கிடைத்துள்ளது. இது வரும் ஒக்ரோபர் 11ஆம் நாள் வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படும்.

வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில், அதன் உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்பு வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து. அரசியலமைப்பு சபையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு வரைவு சமர்ப்பிக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ad

ad