புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2018

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை: 62 தமிழர்கள் சிக்கித்தவிப்பு!


ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. காங்ரா, குலு, சம்பா, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும்கனமழையால், ராவி, பியாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத் தலமான குலு, மணாலியில் நிலச்சரிவுகள் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கித்தவித்து வருகின்றனர். இதனிடையே ஓசூரிலிருந்து சுற்றுலாச் சென்ற 21 பேரும், திருச்சியைச் சேர்ந்த 31 மாணவர்கள் உள்பட 41 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை ஹிமாச்சல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குலு, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாநிலம் முழுவதும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ad

ad