புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2018

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்


சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பாரிய போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பொது அமைப்புகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகுமெனவும் கூறப்படுகின்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்விட்டால் நல்லாட்சி அரசை விட்டு வெளியேற முடியுமா? மக்கள் பிரதிநிதிகளே பதில் சொல்ல முடியுமா?’, ‘பதவியை காப்பாற்ற நினைவோர்களே, மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிப்பது இல்லை’, ‘எதிர்கட்சி தலைவர் இதுவரை செய்த இராஜதந்திரம் என்ன? இழுத்தடிப்பு தீர்வா? சிறையில் வாழும் நிலையில்’ போன்ற பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad