புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2018

இது சிக்கலான வழக்கு என்பதால் ஆலோசிக்க வேண்டியுள்ளது; ஆராய வேண்டியுள்ளது’ - ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள்
பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும்,  விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்  என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் கடந்த 8ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதையடுத்து மறுநாள் 9ம் தேதி  மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடியது.  முதல்வர் பழனிச்சாமி தலைமையில் 2 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்,  7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மானம் அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  ஆளூநர் மாளை இன்று (15.9.2018) வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’அமைச்சரவையின் முடிவு நேற்றுதான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளது.  அமைச்சரவை தீர்மானத்தை ஆராய்ந்து வருகிறோம்.    சிக்கலான வழக்கு  என்பதால் பல்வேறு விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.  சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.   7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆராய வேண்டிய ஆவணங்கள் அதிகளவில் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படும்.  அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு 7 பேர் விடுதலையில் தீர்க்கமான, நியாயமான, நேர்மையான முடிவு எடுக்கப்படும்.  
 மற்றபடி  7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான செய்தி தவறானது’’என்று கூறியுள்ளது.
 

ad

ad