புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

தமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பாராட்டு!


1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த போது, சிறிபெரும்புத்தூரில் குண்டுத்தாக்குதலால் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். பல வருடங்களாக முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்த இந்த வழக்கிற்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் முகமாக மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைல் உள்ள ஏழு பேரையும் விடுவிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 161வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என அறியப்படுகின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில் ஏற்கனவே நிறைவேற்ப்பட்ட இத்தீர்மானமானது மத்திய அரசால் மறுக்கப்பட்டு மேல் நீதிமன்றில் முறையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ராகுல் காந்தியின் ஒரு பூடகமான அறிக்கையில் இந்த ஏழு பேரையும் தாம் மன்னித்து விட்டதாகக் கூறியிருந்ததை இங்கு பதிவு செய்கின்றோம். இதனை அடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை இன்று 09.09.2018 அன்று நிறைவேற்றி ஆளுனரிடம் பரிந்துரை செய்துள்ளதை மனிதாபமானச் சிந்தனையுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் வரவேற்கின்றது.

சிறையில் உள்ள ராஜீவ் கொலை விவகாரத்தில் சிக்கிய ஏழுபேரையும் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 06.09.2018 தேதியன்று தீர்ப்பளித்தது. தமிழகச் சட்டமன்றத்தின் தீர்மானத்தை அடுத்து இந்த முக்கியமான வழக்கின் முடிச்சை அவிழ்க்கும் பொறுப்பு ஆளுனரின் கையில் தான் உள்ளது.

மேற்படி அமைச்சர் ஜெயக்குமாரின் கூற்றுப்படி எடுக்கப்பட்ட தீர்மானம் இன்றே உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத்தின் சனனாயகமான இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஆளுநர் எழுவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் என பணிவாக வேண்டி நிற்கின்றோம். அத்துடன் தமிழக அமைச்சரவையின் இத் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம்.

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

ad

ad