03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? – தமிழிசை


10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும், ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து 9ம் திகதி கூடிய அமைச்சரவை, ஏழு பேரை விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்தது. இந்நிலையில் ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் பாஜகவும், அதிமுகவும் கைகோர்த்து செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சூரஜ்வாலா வெளியிட்ட டுவீட்டை சுட்டிக்காட்டி பாஜக ஆதரவாளர் நாராயணன் திருப்பதி, “தீவிரவாதிகளை. விடுவிக்க அதிமுக – பா ஜ க நினைக்கிறது, தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுகோள் விடுத்து ஊக்குவிப்பதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தா என டுவிட் செய்தார். இதனை மேற்கோள் காட்டிய தமிழிசை, “10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்