புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

விக்னேஸ்வரனின் பிறந்த தினத்தன்று வட மாகாண சபையின் இறுதி அமர்வு!



வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஒக்டோபர் 23ஆம் திகதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நடைபெறும் எனக் கூறிய அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இன்னமும் இரு அமர்வுகள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார்.

வடக்கு மாகாண சபையின் 131ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக்காலம் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வு கள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே, அதனை அறிந்து 23ஆம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம்.

மேலும், இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது. அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும்.

இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும்” – என்றார்

ad

ad