புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2018

கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்


தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார் என்­கிறார் சம்­பந்தன்

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரை வில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

மேலும் அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை அடை­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்னும் உறு­தி­யாக இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. நாம் அதற்­கான கரு­மங்­களை செய்வோம் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் குறிப்­பிட்டார்.

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் மற்றும் அண்­மைய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந­திப்பு குறித்து வின­வி­ய­போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இவற்றை குறிப்­பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்­கின்­றது. அது தொடர்பில் என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?

பதில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரைவில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம். சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தீர்கள். என்ன விட­யங்­களை பேசி­னீர்கள்?

பதில் அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். ஜனா­தி­பதி பங்­கேற்ற அர­சியல் நிகழ்வில் நானும் பங்­கேற்று உரை­யா­டினேன். ஜனா­தி­ப­தியை பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விட­யத்தில் இன்னும் உறு­தி­யா­கவே இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

கேள்வி இராணுவ வீரர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு யோசனை முன்வைக்கவுள்ளமை குறித்து பேசினீர்களா?

பதில் அது தொடர்பில் பேசவில்லை

ad

ad