03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், செப்டம்பர் 03, 2018

சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் நழுவும் இலங்கை! - ஜெனிவாவில் இருந்து கடிதம்


முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் உதவிப்பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் மேற்கொண்ட சித்திரவதைகள் தொடர்பில் பொறுப்புக்கூறும் பதிலை வழங்காமை குறித்து ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, இலங்கைக்கு கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் உதவிப்பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் மேற்கொண்ட சித்திரவதைகள் தொடர்பில் பொறுப்புக்கூறும் பதிலை வழங்காமை குறித்து ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, இலங்கைக்கு கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் உதவிப்பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் மீதான நீதி பொறிமுறை ஒன்றின் விசாரணை தொடர்பிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் குழு கோரியிருந்த போதும் இதனை இலங்கை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை.

ஓன்றரை வருடக்காலமாக இந்த பதில் வழங்கப்படாமையை அடுத்து இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் தூதுவருக்கு விளக்கக்கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு 2017ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை பதிலளித்திருக்க வேண்டும். எனினும் இதுவரை பதிலளிக்கவில்லை.

2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள நான்காம் மாடியில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் வவுனியா மெனிக்பாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்தே இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் குழு கோரியிருந்தது.