புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2018

இந்திய நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறார் சிவாஜிலிங்கம்



இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று, ஆசிய பவுண்டேசனின் ஏற்பாட்டில், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் குழுவில் சிவாஜிலிங்கமும் உள்ளடக்கப்பட்டிருந்தார். எனினும், அவரது நுழைவிசைவு விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் நிராகரித்துள்ளது.

இதனால் ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் தாம் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதால் தான், தமக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ad

ad