03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், செப்டம்பர் 06, 2018

வீட்டுக்குள் புகுந்து சங்கிலி அறுத்த இராணுவச் சிப்பாய் கைது!

வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர், வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸாரால், இன்று கைது செய்யபட்டுள்ளார்.நெடுங்குளத்தில் அரச விடுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரிடம், செவ்வாய்க்கிழமை இலத்திரனியல் பொருள் ஒன்றை விற்பனைச் செய்து தருமாறும், நாளை வந்து பணத்தைப் பெற்றுச் செல்வதாகவும், குறித்த இராணுவச் சிப்பாய் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில், வீட்டின் ஜன்னல் வழியாக உட்புகுந்த குறித்த இராணுவச் சிப்பாய் குடும்பஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியையும் அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்