புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2018

வவுனியா நகரில் முறுகல் நிலை!


வவுனியா புதிய பேரூந்து நிலைய்தில் இன்று மீண்டும் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது.

புதிய பேரூந்து நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடான நிலையே காணப்பட்டு வரும் நிலையில் இன்று பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை நிறுத்த முடியாது என வவுனியா நகரசபையினால் சமிக்ஞை பதாதை அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக பேரூந்து நிலைய பகுதியில் முற்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் நகரசபைத் தலைவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இம் முறுகல் நிலைக்கு காரணம் பேரூந்துகளி்ல் வவுனியா வரும் பயணிகள் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருக்கும் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்திச் செல்வது வழக்கம்.

ஆனால் இன்று பேரூந்துகள் நிறுத்துவதற்கு தடை என நகரசபை பதாதை வைத்ததால் முச்சக்கரவண்டிகளின் வருமானமும் தடைப்பட்டுள்ளது. ஆகவே தான் பேரூந்துகள் நிறுத்த தடை விதித்தமைக்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் நகரசபை தலைவருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

புதிய பேரூந்து நிலையத்திற்குள் வேறு மாவட்டங்களில் இருந்து மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் வீதியோரத்தில் தரித்து நின்றே சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுவரும் நிலையில் தமது வீடுகளுக்கு முன்பாக பேரூந்துகளை நிறுத்துவதை தடை செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் வவுனியா நகரசபையில் தமது முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம் மக்களின் நலன் கருதி வவுனியா நகர தலைவர் மற்றும் உப தலைவர் ஏற்பாட்டில் அப்பகுதி மக்களின் நலன்கருத்தி பேரூந்துகளை சில மீற்றர் தூரம் சென்று நிறுத்தும் வகையிலேயே வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யும் சமிக்ஞை பதாதைகளை அமைக்க திட்டமிட்டு இன்று காலை அப்பகுதியில் நகரசபை ஊழியர்களுடன் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் தரித்து பேரூந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ள முற்சக்கரவண்டி உரிமையாளர்கள் சாரதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக அங்கவீனர்கள் புதிய பேரூந்து நிலையத்திற்கு வருவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் மக்களுக்கு பதிப்பு ஏற்படும் வகையில் தம்மால் கட்டணங்களை பெறமுடியாது என்பதால் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவே மாகாணங்களுக்கிடையிலான பேரூந்துகள் நிறுத்தி செல்ல வேண்டும் அல்லது பேரூந்து நிலையத்திற்குள் பேரூந்துகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதுவரை வாகன தரிப்புக்கு தடை விதிக்கும் சமிக்ஞைகளை அமைக்க விட மாட்டோம் என வவுனியா நகர தலைவருடன் முறுகலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸாரும் அப்பகுதிக்கு வருகை தந்து எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்த நிலையில் நகரசபையினர் தமது பணியை இடைநிறுத்தியிருந்ததுடன் முறுகல் நிலையும் சுமூகமாக முடிவடைந்தது.

ad

ad