புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2018

நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா.வில் யோசனைகளை முன்வைப்பேன் ; ஜனாதிபதி


விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுசபை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்.

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், இராணுவத்தினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஐ.நா. சபையில் அறக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன்.

மேலும் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை.

நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைககள் பொறுத்தமற்றது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதாயின் முதலில் குற்றப்பத்திரிகை மற்றும் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். அதனை விடுத்து இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்யமுடியாது.

மேலும் தற்போது தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நான் எதிர்பார்க்கின்றேன்.

என்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற செய்திகள் தொடர்பில் விஷேட பொலிஸ்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமும் விபரங்களை கேட்டுள்ளேன் என்றார்.

ad

ad