புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2018

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில்தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பம்

தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் ஜனநாயகப் பேராளிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முயற்பட்ட போதே இந்த முறுகல் நிலை ஆரம்பமானதாக   தெரிவித்தார்.
இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் செய்து வீர காவியமான தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.
திலீபனின் நினைவுத் தூபியில் அலங்காரத்தை மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலட செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் சகிதம் நிகழ்வை நடாத்த முனைந்த நிலையில் ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக தமிழரசு கட்சியைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஒருவரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் தீலிபனுக்கு மலர் மாலைகளை அணிவித்து நினைவஞ்சலிகளை செலுத்தினர்.
இந்த நிகழ்வுகளின் இறுதியில் அவ்விடத்தில் வைத்து வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முயற்பட்டதுடன், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒலிபெருக்கியின் பாடல் சத்தத்தை அதிகரித்ததாக அங்கிருந்த தெரிவித்தார்.
இவ்விடத்தில் வைத்து அரசியல் பேச வேண்டாம் என அங்கிருந்த இளைஞர்கள் வட மாகாண சபையின் அவைத் தலைவரை நோக்கி கூறி போது, தீலிபனுக்கான நினைவுத் தூபியை தாமே கட்டியதாகவும் தாம் எதுவும் செய்வேன் எனவும் சி.வி.கே சிவஞானம் பதில் அளித்துள்ளார்.
ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சியினர் கோரியதை அடுத்து, நிகழ்வுகள் முடிந்தால் செல்ல வேண்டியது தானே பிறகென்ன அரசியல் என தமிழ் தேசிய முன்னணியினர் முரண்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சி.வி.கே சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இறுதியில் ஒருவருக்கு ஒருவர் சமரசமாகிய நிலையில், தியாக தீபம் தீலிபனின் நினைவிடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியால் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் 10 மணியளவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த நிகழ்வுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கே ஆரம்பித்திருந்ததாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி, என்றோ ஒருநாள் தமிழ் மக்களுக்கு விடிவுவரும் என்ற நம்பிக்கையுடன் இறுதியில் தனது இன்னுயிரை தியாகம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுகளில் ஏற்பட்ட இந்த முரண்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள மக்கள், இந்த நிகழ்வுகளை ஒன்றுபட்டு ஏற்பாடு செய்யாமை அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்

ad

ad