புதன், செப்டம்பர் 26, 2018

இலங்கை போக்குவரத்து சபையினர் வேலைநிறுத்தத்தில்

கண்டி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (26) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில்
ஈடுபட்டுள்ளதாக மத்திய மாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

ஓய்வு பெற இருக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் தனிப்பட்ட ஒருவரை நியமித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேரத் முதியன்சலாகே பண்டார தெரிவித்துள்ளார். 

அவ்வாறு யாரேனும் ஓய்வு பெறுவதாக இருப்பின் அப்பதவிக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய போக்குவரத்து முகாமையாளரே நியமிக்கப்பட ​வேண்டும் எனவும் இருப்பினும் இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் தனிப்பட்ட ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, தற்போதைய பிராந்திய போக்குவரத்து முகாமையாளரை நியமிக்கும் வரையில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.