செவ்வாய், செப்டம்பர் 18, 2018

புலிகளை இனிமேலும் சிறைப்படுத்துவதில் அர்த்தமில்லை; பாட்டளி சம்பிக்க


பயங்கரவாத யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் எல்.ரி.ரி.ஈ. யினரைத் தடுத்து வைப்பது பொருத்தமான நடவடிக்கை அல்லவென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யுத்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை சமூக மயப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.

இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னர் இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

கோட்டையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்