புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2018

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்கவே முடியாது! சுமந்திரன் சீற்றம்


போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார் எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாக பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளை புறந்தள்ளும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.


தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாக கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காக கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன.அதன் பின்னரே சுமார் 12,000 போராளிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாக படையினருக்கு பொதுமன்னிப்பு என்ற அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad