புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2018

ரொறொன்ரோவில் பாதுகாப்பு எச்சரிக்கை வாபஸ்


கனடா - ரொறொன்ரோ பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களை அடுத்து, பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்புக்கு எச்சரிக்கை தற்போது மீள பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா - ரொறொன்ரோ பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களை அடுத்து, பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்புக்கு எச்சரிக்கை தற்போது மீள பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பல் 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் சென்டர் ஸ்ட்ரீட் நோர்த் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பொலிஸார் சுற்றிவளைத்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹாமில்டன், ஹால்டன் மற்றும் பீல் பிராந்தியங்கள், முக்கியமாக எரிவாயு நிலையங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து 15 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இந்த பாதுகாப்பு எச்சரிக்கை மீள பெறப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணைக்கு உற்படுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad