03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், செப்டம்பர் 10, 2018

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

வவுனியா பூ ரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்தசம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,


“ஆலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பகுதியை சேர்ந்த இளம் கணவனும், மனைவியும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் காதலித்து திருமணம் முடித்துள்ளனர்.

பின்னர் பரசங்குளம்பகுதியை சேர்ந்த தமது பாட்டனாரின் வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நித்திரைகொள்ள சென்றனர். இந்த நிலையில் நேற்றுக் காலை அவர்களது அறையை சென்றுபார்த்த பாட்டனார் தமதுபேரப்பிள்ளைகள் தூக்கி ல்தொங்கியநிலையில் இருந்துள்ளதை அவதானித்தார்.


பின்னர்பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தபட்டது.

சம்பவத்தில் கௌசிகா வயது19, நந்தகுமார் 23 என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.”

புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.