03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, செப்டம்பர் 01, 2018

பரபரப்புக்கு மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகம் திறப்பு, கூட்டம்! - அடுத்த கட்டம் குறித்து ஆராய்வு

பெரும் பரபரப்புக்கு மத்தியில், நேற்று யாழ்ப்பாணத்தில், தமிழ் மக்கள் பேரவையின் புதிய அலுவலகம் திறந்து
வைக்கப்பட்டதுடன், பேரவையின் 12 ஆவது கூட்டமும் இடம்பெற்றது. யாழ்- பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
   அதேவேளை,பேரவையின் கடந்த கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதுவும் கூட்ட ஆரம்பத்தில் முதலமைச்சரின் உரையினைப் பதிவு செய்வதற்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஊடகவியியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. பேராசிரியர் வி.பி.சிவநாதன், யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் முன்னாள் தலைவர் கேசவன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தனர்.
கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் சாரம்சங்களை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அதாவது இளைஞர் மாநாடொன்றை நடத்ததுவது தொடர்பிலும் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த அமர்வில் தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பிலுமே அதிகம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
இதே வேளை கூட்ட ஆரம்பத்தின் போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்குவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது, வேறு கட்சியில் இணைவது, தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்களை இணைத்துக் கொண்டு தமிழ் மக்களய் பேரவை போன்று பொது அமைப்பாக இயங்குவது என்று தனக்கு தற்போதுள்ள நான்கு தெரிவுகள் தொடர்பில் பேசியிருந்தார்.அந்த விடயம் குறித்தும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதில் முதலமைச்சர் ஒதுங்குவதனையோ பேரவை போன்று பொது அமைப்பில் மாத்திரம் தொடர்வதனையோ பலரும் விரும்பவில்லை.
அதனை விடுத்து தனிக்கட்சியா வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்தே விரிவாக ஆராயப்பட்டது. ஆனாலும் முதல்வரின் முடிவே இறுதியானது என்று தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது எனவும் அவர்கள் கூறினர்.
மேலும் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெனிவாவில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அங்கு தமிழர் தரப்பாக புலத்திலும் தாயகத்திலும் இருக்கின்ற தரப்புக்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.