03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, செப்டம்பர் 08, 2018

மகனை விடுதலை செய்ய முதல்வரிடம் மனு கொடுப்பேன் - முருகன் தாயார் பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன் என்று முருகன் தாயார் கூறினார். #RajivCaseConvicts
மகனை விடுதலை செய்ய முதல்வரிடம் மனு கொடுப்பேன் - முருகன் தாயார் பேட்டி
சென்னை:

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

இது தொடர்பாக முருகனின் தாயார் சோமணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

வேலூர் சிறையில் உள்ள முருகனையும், நளினியையும் சந்தித்து பேசினேன். அதன் பின்னரே முருகன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து அறிந்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் இதற்கு முன்பு பல முறை விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்து மனவேதனை அடைந்தேன். சிறையிலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர். கடந்த ஆண்டு பிரதமர், தமிழக முதல்வருக்கு கருணை மனு அளித்தேன்.

மனு பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. ஆனால் முதல்வரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

தற்போது வந்துள்ள தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் மனு அளிக்க உள்ளேன். சோனியாகாந்தியையும் சந்திக்க விரும்புகிறேன்.

நளினி, முருகனுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளதால் இங்கேயே வாழ விரும்புகிறோம். அவர்களின் விடுதலைக்கு பிறகு 108 வீடுகளில் பிச்சை எடுத்து கடவுளுக்கு நேர்த்தி கடனை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்