புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2018

இன்­னமும் உங்­களை நம்­பு­கிறேன் அர­சியல் கைதி­களை விடு­வி­யுங்கள்.....ஜனா­தி­ப­திக்கு விக்­கினேஸ்­வரன் கடிதம்


 
 சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் கடிதம் எழு­தி­யுள்ளார்.

நாட்டில் சமா­தா­னத்­தையும் நல்­லெண்­ணத்­தையும் உண்­டு­பண்ண நல்­லாட்சி அர­சாங்கம் மிகப்­பெ­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது என்று கூறப்­படும் கூற்று, மேற்­படி அர­சியல் சிறைக்­கை­திகள் சம்­பந்­த­மாக நீங்கள் காட்டும் தாம­தத்தின் நிமித்தம் வெறும் கண்­து­டைப்போ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது என்றும் இந்தக் கடி­தத்தில் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்தக் கடி­தத்தின் பிர­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது குறித்து ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் சம்­பந்­த­மான முன்­னைய பல கடி­தங்­களின் தொடர்ச்­சி­யாக இந்த அவ­சர கடி­தத்தை உங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்றேன். அந்தக் கடி­தங்­களின் பிர­திகள் இத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளன.

வட­மா­கா­ணத்­திற்கு நீங்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்ட பல தரு­ணங்­களில் (தமிழ்) அர­சியல் கைதிகள் பற்றி உடனே நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். வழக்குப் பதி­யப்­ப­டாமல் சிறையில் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருப்­போர்க்கு எதி­ராக உடனே வழக்­குகள் தாக்கல் செய்­யப்­படும் என்றும் போது­மான சாட்­சி­யங்கள் இல்­லா­த­வரை உடனே விடு­விக்­கப்­போ­வ­தா­கவும் நீங்கள் வாக்­கு­று­திகள் அளித்தும் அவை இற்­றை­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இது சம்­பந்­த­மாக முன்­னைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யா­ருக்கும் அவரின் நேரடி உள்­ளீட்டை வேண்டிக் கடிதம் எழு­தி­யி­ருந்தேன். அவ­ருக்கு அனுப்­பிய கடி­தத்தின் பிரதி தங்­க­ளுக்கு இத்தால் அனுப்­பப்­ப­டு­கின்­றது.

தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாலும் மற்­றை­யோ­ராலும் என்­னாலும் இது சம்­பந்­த­மாக இது­வரை எடுக்­கப்­பட்ட பிர­யத்­த­னங்கள் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இதன் கார­ணத்­தால்தான் அனு­ரா­த­புரம் அர­சியல் சிறைக்­கை­திகள் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட வேண்டி வந்­துள்­ளது.

கொழும்பு, பூசா போன்ற சிறைச்­சா­லை­களில் அடைக்­கப்­பட்­டி­ருக்கும் இவ்­வா­றான கைதி­களும் மேற்­படி போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வது பற்றிக் கருத்­துக்கள் பரி­மா­றிக்­கொண்­டி­ருப்­ப­தாகத் தெரிய வரு­கின்­றது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திக­திய கடி­தத்தின் மூலம் உங்­களின் செய­லாளர் சட்­டத்­துறைத் தலைமை அதி­ப­திக்கு ஒரு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். அதில் உங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட எனது கடி­தத்தில் கண்­ட­வாறு சட்­டத்­த­ர­ணி­களைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும் என்றும் கைதிகள் சம்­பந்­த­மான நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது. வழக்­க­மாக நீதி­மன்ற வழக்­குகள் தாம­தப்­ப­டு­வது பற்­றியும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவை சம்­பந்­த­மான உரிய நட­வ­டிக்­கைகள் நேரத்­துக்கு எடுத்து சிறைக் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டா­மை­யா­லேயே சிறைக் கைதிகள் உங்கள் வாக்­கு­று­தி­களில் நம்­பிக்கை இழந்து மேற்­படி சாகும் வரை உண்­ணா­வி­ரத போராட்­டங்­களில் இறங்­கி­யுள்­ளார்கள் என்­பது உங்­க­ளுக்கு இப்­பொ­ழுது தெரிந்­தி­ருக்கும்.

நாட்டில் சமா­தா­னத்­தையும் நல்­லெண்­ணத்­தையும் உண்­டு­பண்ண நல்­லாட்சி அர­சாங்கம் மிகப்­பெ­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது என்று கூறப்­படும் கூற்று, மேற்­படி அர­சியல் சிறைக்­கை­திகள் சம்­பந்­த­மாக நீங்கள் காட்டும் தாம­தத்தின் நிமித்தம் வெறும் கண்­து­டைப்போ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது.

இரா­ணுவப் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக கட்­டா­ய­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டி­வரும் போது மேற்­படி தமிழ்ச் சிறைக் கைதி­களைப் பகடைக் காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­தவே அவர்கள் சம்­பந்­த­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது தாம­திக்­கின்­றீர்­களோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது. என்றாலும் உங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை. நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை நிலைநாட்டுவீர்கள் என்று இன்னமும் நம்புகின்றேன்.

மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் சம்பந்தப்பட்ட பல தரப்பினரின் கருத்துக்களை அறிந்து உடனேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. கருத்துக்களை அறிந்த பின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உகந்த நிவாரணங்களை உடனேயே வழங்குவது உங்கள் தலையாய கடமை என்பதை உங்களுக்கு கூறி வைக்கின்றேன்.

ad

ad