புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2018

திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி

äகடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன விடுதலை குறித்து பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் மீது பயன்படுத்தப்படும் ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீதி பயன்படுத்தியதை தமிழக அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்திருந்தன.
இந்த நிலையில், இன்று திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டத்தினை நீக்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 2017இல் சென்னையில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் UAPA பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.
முன்னதாக, மத்திய -மாநில அரசுகளின் தவறுகளை, மக்கள் விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதன் காரணத்தினாலேயே திருமுருகன் காந்தி அதிகப்படியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஜனநாயக சக்திகள் அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad