புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2018

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் பாலியல் புகார


பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க பெண் புகார் கூறி உள்ளார்.

ஜெர்மனின் டெர் ஸ்பிகல் (Der Spiegel) என்ற பத்திரிகையில் போர்த்துகீசியம் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் 2009 ல் அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதாக குற்றஞ்சாட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த பத்திரிகை தகவல் படி 2009 ஆம் ஆண்டு லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து ரொனால்டோ வக்கீல் இத்தகைய செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்பாடியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார்.

ரொனால்டோவின் வழக்கறிஞர் கிறிஸ்டியன் ஸ்கெர்ட்ஸ் கூறியதாவது:-

பத்திரிகையின் இந்த செய்தி தனியுரிமையை பாதிக்கும் ஒரு அனுமதிக்கப்படாத செய்தியாகும் மற்றும் பத்திரிகையாளர்களிடம் இருந்து தனது வாடிக்கையாளருக்கு சட்டரீதியாக நிவாரணம் தேவைப்படும்.

உலக விளையாட்டு வீரர்களின் மிகவும் புகழ் பெற்ற வீரரகளில் ஒருவர் ரொனால்டோ, ஐந்து முறை உலகின் சிறந் கால்பந்து வீரர் என்ற விருதை பெற்றவர். இவர் சமீபத்தில் 100 மில்லியன் யூரோக்களுக்கு ரியல் மாட்ரிட்டிற்கு அணிக்கு மாறி உள்ளார்.

இத்தாலிய கால்பந்து டெர் ஸ்பிகல் பத்திரிகையின் செய்தியை மறுத்து உள்ளது.

பத்திரிகை செய்தியில் ஜூன் 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஓட்டலில் பாலியல் பலாத்காரம் நடந்தாக பாதிக்கப்பட்ட பெண் கேத்ரின் மேயோர்கா என்பவர் கூறியதாக அவரது வக்கீல் லெஸ்லி மார்க் ஸ்டோவால் தெரிவித்து உள்ளார்.

ரொனால்டோவும்-மேயோர்கா நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த பிரச்சினையை தீர்த்து கொண்டதாக வக்கீல் ஸ்டோவால் தெரிவித்து ஸ்டோவாலின் கூற்றுப்படி, மீண்டும் ஒருபோதும் பேச மாட்டேன் என்றும், ரொனால்டோ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 375,000 டாலர் பணம் கொடுத்ததாகவும் கூறி உள்ளார். தனது மீதான் பாலியல் புகாரை ரொனால்டோ மறுத்து உள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டு உள்ளது.

ad

ad